பட்டாசு பார்சலை இறக்கியபோது பயங்கர வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம்


பட்டாசு பார்சலை இறக்கியபோது பயங்கர வெடி விபத்து - 5 தொழிலாளர்கள் படுகாயம்
x

காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை இறக்கியபோது ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

காக்கிநாடா,

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் மூட்டைக்குள் வெங்காய வெடிகள் இருந்தது தெரியாமல் பட்டாசு பார்சலை கீழே போட்டபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக இன்று காலை காக்கிநாடாவில் உள்ள ஒரு டிரான்ஸ்போட் நிறுவனத்துக்கு லாரியில் வந்த பார்சல்களை தொழிலாளர்கள் இறக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது அதிலிருந்த ஒரு பார்சலை தொழிலாளி ஒருவர் இறக்கி தரையில் போட்டபோது அது பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் அங்கிருந்த 5 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் காக்கிநாடா அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில் அந்த பார்சலில் வெங்காய வெடிகள் இருந்தது தெரிய வந்துள்ளது. ஐதராபாத்திலிருந்து மூன்று பார்சலில் வெங்காய வெடிகள் காக்கிநாடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தெரியாத தொழிலாளி பட்டாசு பார்சலை கீழே போட்டதில் அது வெடித்துச் சிதறியுள்ளது. மேலும் 2 பார்சலை பறிமுதல் செய்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story