மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை - புதுச்சேரி அரசு

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது
புதுச்சேரி,
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதேவேளை வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக உருவாக உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு மோந்தா புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை மறுதினம் இரவு ஆந்திராவின் காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மோந்தா புயல் காரணமாக புதுச்சேரியில் உள்ள ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் காக்கிநாடா அருகே ஏனாம் அமைந்துள்ளதால் பாதுகாப்பு நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






