டெல்லி: அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - இளைஞர் பலி

தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் முசாபர்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் பல குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இதனிடையே, இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகனம் பழுதுபார்க்கும் கடை உள்ளது. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ அடுக்குமாடி குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஜுனைத் (வயது 20) என்ற இளைஞர் தீயில் உடல் கருகி உயிரிழந்தார். ஜுனைத்தின் சகோதரரான சமீர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






