டெல்லி அரசின் செயற்கை மழை திட்டம் ; காங்கிரஸ் கிண்டல்


டெல்லி அரசின் செயற்கை மழை திட்டம் ; காங்கிரஸ் கிண்டல்
x

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்விக்கும் திட்டத்துக்கு டெல்லி அரசு ரூ.34 கோடி செலவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பொழிய வைக்கும் திட்டத்தை டெல்லி அரசு மேற்கொண்டது. விமானத்தில் இருந்து மேக கூட்டம் மீது ரசாயனங்களை தெளித்து மழை பெய்ய வைப்பதே இந்த திட்டம் ஆகும். இதன்மூலம், டெல்லியில் காற்றின் தரம் உயர்ந்து இருப்பதாக டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி மன்ஜிந்தர் சிங் சிர்சா தெரிவித்தார். காற்று தரம் குறித்த தரவுகளை டெல்லி அரசு திருத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்தை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த செயற்கை மழை பெய்விக்கும் திட்டத்துக்கு டெல்லி அரசு ரூ.34 கோடி செலவிட்டுள்ளது. ஆனால் அத்திட்டத்துக்கு எதிராக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்பட 3 அமைப்புகள் அறிவுறுத்தி இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல்துறை இணை மந்திரி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கடந்த 31-ந் தேதி, டெல்லி ஐ.ஐ.டி.யில் உள்ள மதிப்புமிக்க மையம், காற்றின் தரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவாது என்று தெரிவித்தது. டெல்லி அரசு ஏதோ செய்கிறது என்று காட்டிக்கொள்வதற்காக வேண்டுமானால் இத்திட்டம் பயன்படும். ஆனால் விஞ்ஞான உலகம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. ஒரு குறைந்த பரப்பளவில் ஓரிரு நாட்கள் லேசான முன்னேற்றம் ஏற்படுவது, உண்மையிலேயே ஒரு நல்ல நகைச்சுவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1 More update

Next Story