‘தி.மு.க. அரசு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது’ - பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்


‘தி.மு.க. அரசு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது’ - பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர்
x
தினத்தந்தி 12 Dec 2025 5:08 PM IST (Updated: 12 Dec 2025 6:50 PM IST)
t-max-icont-min-icon

ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிரானதாக மாறிவிட்டது என அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் பேசியதாவது;-

“மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்து ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் கோவிலை நோக்கி சென்ற பக்தர்கள் மீது தமிழக அரசு தடியடி நடத்த உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவு இருந்தபோதிலும், இந்து பக்தர்கள் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதிக்கப்படவில்லை.

ஒரு மாநிலம் சனாதன தர்மத்திற்கு எதிரானதாக மாறிவிட்டது. அமைச்சர்கள் இந்து விரோத அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதுடன், திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறது.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story