ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயம்

கழுகு வேகமாக வந்து மோதியதில் இன்ஜினில் இருக்கும் கண்ணாடி உடைந்து சிதறியது.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பராமுல்லாவில் இருந்து பனிஹால் வரை செல்லும் ரெயிலில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது.
அந்த ரெயில் அனந்த்நாக் மற்றும் பிஜ்பெஹாரா இடையிலான வழித்தடத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென இன்ஜின் மீது ஒரு கழுகு வேகமாக வந்து மோதியுள்ளது. இதில் இன்ஜினில் இருக்கும் கண்ணாடி உடைந்து சிதறியது.
இதனால் இன்ஜின் டிரைவரின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. அதே சமயம், கழுகு இன்ஜின் பெட்டிக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தால் விபத்து எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story






