மும்பை விமான நிலையத்தில் ரூ.5.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - காங்கோ பெண் கைது


மும்பை விமான நிலையத்தில் ரூ.5.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் - காங்கோ பெண் கைது
x

மும்பை விமான நிலையத்தில் ரூ.5.4 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காங்கோ நாட்டின் கின்ஷாசா நகரில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது காங்கோ நாட்டு பெண் ஒருவர் 544 கிராம் எடை கொண்ட 10 போதைப்பொருள் பாக்கெட்டுகளை விழுங்கி கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் மருத்துவ சோதனை செய்யப்பட்டு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.5.4 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போதைப்பொருளை கடத்திய பெண்ணை கைது செய்து, அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story