காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல்; பெண் மண்டை உடைந்தது


காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல்; பெண் மண்டை உடைந்தது
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் வேட்பாளர் பிரசாரத்தின் போது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஒரு பெண்ணின் மண்டை உடைந்தது.

விஜயாப்புரா:

விஜயப்புரா மாவட்டம் முத்தேபிகால் தொகுதியில் முன்னாள் மந்திரி சி.எஸ். நாடகவுடா காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கோனா கிராமத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மர்மநபர்கள் திடீரென்று கல்வீசி தாக்கினர். இந்த கல், கூட்டத்தில் பங்கேற்ற சாந்தா என்ற பெண் தொண்டர் தலையில் விழுந்தது. இதில் அந்த பெண்ணின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே காங்கிரசார், அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். காங்கிரஸ் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதாவினர் கல்வீசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பும்,பதற்றமும் ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து காங்கிரசாரை சமாதானப்படுத்தினர்.

1 More update

Related Tags :
Next Story