கிணற்றுக்குள் விழுந்த யானை, 20 மணி நேரப் போராட்டத்துக்கு பின் மீட்பு

உணவு தேடி வந்த காட்டு யானை, விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
கோழிகோடு,
கேரள மாநிலம், மலப்புரம் தொடும்புழா வனப்பகுதியில் இருந்து உணவுக்காக வெளியேறிய காட்டு யானை ஒன்று, வெற்றிலை பாறை பகுதியில் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் புகுந்தது. அப்போது அங்கிருந்த விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
யானை கிணற்றுக்குள் விழுந்தது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், ஜேசிபி உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டில் மண்ணை தோண்டி எடுத்து யானை மேலே வர வழி வகை செய்தனர்.
சுமார் 20 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, யானை கிணற்றில் பக்கவாட்டு பகுதியில் ஏற்படுத்தப்பட்டு இருந்த வழியின் மூலம் வெளியே வந்தது. இதன் பின்னர் வெடி வெடித்து யானையை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
Related Tags :
Next Story






