வயலில் சன்னி லியோன் போஸ்டர் வைத்த விவசாயி: ஆர்வத்துடன் ஓடி வந்த ரசிகர்கள்

பாலிவுட் நடிகையின் போஸ்டரை பயன்படுத்தி இருப்பது அனைவரின் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.
வயலில் சன்னி லியோன் போஸ்டர் வைத்த விவசாயி: ஆர்வத்துடன் ஓடி வந்த ரசிகர்கள்
Published on

பெங்களூரு,

இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தங்கள் அறுவடைகளை பாதுகாக்க,வர்ணம் பூசப்பட்ட பொம்மைகள் முதல் விசித்திரமான பயமுறுத்தும் பறவைகள் வரை பெரும்பாலும் ஆக்கப்பூர்வமான முறைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் கர்நாடக மாநிலம் முதனூர் கிராமத்தில் உள்ள ஒரு விவசாயி தனது பருத்தி வயலின் நடுவில் நடிகை சன்னி லியோனின் பெரிய போஸ்டரை ஒட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தனது பருத்தி பயிரை தீய பார்வை மற்றும் பொறாமையில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த செயலை விவசாயி செய்துள்ளார். பிரகாசமான மஞ்சள் நிற உடையில் நடிகை சன்னி லியோனியின் இந்த உயரமான கட்-அவுட் அப்பகுதி மக்களின் கவனத்தை திசை திருப்பி உள்ளது. சன்னிலியோனின் ரசிகர்கள் மட்டுமன்றி உள்ளூர்வாசிகளும் ஆர்வத்துடன் வயலுக்கு வந்து பார்க்கின்றனர். பயிர் மீது துரதிர்ஷ்டத்தை தடுக்கும் பாரம்பரிய நடைமுறைக்கு பாலிவுட் நடிகையின் போஸ்டரை பயன்படுத்தி இருப்பது அனைவரின் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

இந்த போஸ்டர் தனது பயிர் மீது பொறாமைப்படு பவர்களின் பார்வையை குறைக்கும் என்றும், அதிக மதிப்புள்ள பயிரை பாதுகாக்க உதவும் என்றும் விவசாயி நம்புவதாக கூறப்படுகிறது. சன்னி லியோனின் போஸ்டர் பயிரை பாதுகாக்கும் என்ற விவசாயியின் நூதன முறை கிராம மக்கள் மத்தியில் ஆச்சரியமாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com