திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களுக்கு பாஸ்டாக் கட்டாயம்


திருப்பதி மலைப் பாதையில் வாகனங்களுக்கு பாஸ்டாக் கட்டாயம்
x
தினத்தந்தி 12 Aug 2025 5:58 PM IST (Updated: 12 Aug 2025 5:59 PM IST)
t-max-icont-min-icon

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.

திருப்பதி,

வாகன ஓட்டிகளுக்கு பாஸ்டாக் கட்டண முறையில் நிறைய மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன. மத்திய சாலைப் போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கடந்த ஜூன் மாதம் பாஸ்டாக் வருடாந்திர பாஸ் பற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு வழங்கப்படும் இந்த பாஸின் விலை 3000 ரூபாய் மட்டுமே. இது இந்த மாதம் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்த பாஸ்டாக் வருடாந்திர பாஸ் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இந்த பாஸ் வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடம் அல்லது 200 பயணங்களுக்கு (எது முன்னதாக வருகிறதோ அது) செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு திருப்பதி மலைப்பாதை வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலிருந்து பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரக்கூடிய பக்தர்களுக்கு உடமைகள் சோதனை செய்த பிறகு சாலையில் செல்வதற்கான சுங்கக்கட்டணம் செலுத்திய பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் சமீப நாட்களாக கூட்ட நேரிசல் அதிகமாக உள்ளதால் நீண்ட நேரம் பக்தர்கள் வாகனங்களில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பாஸ்டேக் இருந்தால் மட்டுமே கட்டாயமாக அனுமதிக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்த திட்டம் 15ம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அதே நேரத்தில் பாஸ்டேக் வழங்குவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழ் திருப்பதியில் இருந்து மேல்திருப்பதி செல்லும் வாகனங்களில் பாஸ்டாக் இல்லாத வாகனங்கள், அலிப்பிரியில் அதை வாங்கிய பிறகே மலையேற அனுமதிக்கப்படும். பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி தங்கள் வாகனங்களுக்கு பாஸ்டேக் உள்ள பிறகே வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story