காட்டு யானையை செல்போனில் படம் எடுத்தவருக்கு ஏற்பட்ட கதி: வீடியோ வைரல்

மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை பகுதியில் வந்த ஒரு காட்டு யானையை ஒருவர் செல்போனில் படம்பிடித்தார்.
காட்டு யானையை செல்போனில் படம் எடுத்தவருக்கு ஏற்பட்ட கதி: வீடியோ வைரல்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனச்சரணாலயம் உள்ளது. இந்த வனச்சரணாலயம் வழியாக மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை செல்கிறது. வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்த நிலையில் மைசூரு-ஊட்டி நெடுஞ்சாலை பந்திப்பூர் கெக்கனஹல்லா பகுதியில் வந்த ஒரு காட்டு யானையை, குடும்பத்தினருடன் காரில் வந்த கேரளாவை சேர்ந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி செல்போனில் படம்பிடித்தார்.

பின்னர் அவர் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றார். அப்போது அந்த யானை அவரை துரத்தி சென்றது. இதில் கீழே விழுந்தவரை யானை காலால் தாக்கி விட்டு காட்டுக்குள் தப்பியது. காரில் உடன் வந்தவர்கள் காயம் அடைந்தரை தூக்கி சென்று விட்டனர். ஆனால் அவர் எந்த ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார் என்ற தகவல் இல்லை. அவர் கேரளாவை சேர்ந்தவர் என்பதால், அங்கு அழைத்து செல்லப்பட்டு இருக்கலாம் என்று வன அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே செல்போனில் படம் பிடிக்க முயன்ற நபரை காட்டு யானை துரத்திச் சென்று தாக்கியதை வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரின் நெஞ்சை பதறவைக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com