வாலிபரின் பேச்சில் மயங்கிய பெண் டாக்டர்; அடிக்கடி உல்லாசத்தால் நடந்த விபரீதம்


வாலிபரின் பேச்சில் மயங்கிய பெண் டாக்டர்; அடிக்கடி உல்லாசத்தால் நடந்த விபரீதம்
x
தினத்தந்தி 22 Jun 2025 9:04 AM IST (Updated: 22 Jun 2025 12:40 PM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் 27 வயது வாலிபரின் அறிமுகம் பெண் டாக்டருக்கு கிடைத்தது.

மும்பை,

டேட்டிங் செயலியில் அறிமுகமான வாலிபருடன் பழகிய பெண் டாக்டர் கர்ப்பம் அடைந்தார். பின்னர் தன்னை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக வாலிபர் மீது அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த 28 வயது இளம்பெண் அந்தேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு அவருக்கு ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் டோங்கிரியில் வசிக்கும் 27 வயது வாலிபரின் அறிமுகம் கிடைத்தது. 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசி வந்தனர். இதனால் வாலிபரின் பேச்சில் மயங்கினார் பெண் டாக்டர். மேலும் அடிக்கடி நேரில் சந்தித்து தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

அப்போது வாலிபர் பெண் டாக்டருடன் தனிமையில் இருக்கும் படத்தை தனது செல்போனில் படம் பிடித்து வைத்துள்ளார். 2 பேரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்ததில் கடந்த ஆண்டு இறுதியில் பெண் டாக்டர் கர்ப்பமானார். இதுபற்றி பெண் டாக்டர் வாலிபரிடம் கூறியபோது அவர் கருவை கலைக்க கூறியுள்ளார்.

இதற்கு பெண் டாக்டர் மறுக்கவே, தன்னுடன் தனிமையில் இருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன அவர் கடந்த பிப்ரவரி மாதம் கருக்கலைப்பு செய்து கொண்டார். பின்னர் வாலிபர் பெண் டாக்டருடன் பேசுவதையும். பழகுவதையும் தவிர்த்து வந்தார். இதனால் சந்தேகமடைந்த பெண் டாக்டர் விசாரித்ததில் வாலிபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனாலேயே அவர் தன்னுடன் பழகுவதை தவிர்த்து வந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதனை தொடர்ந்து அவர் போலீசில் புகார் அளித்தார். இந்தப்புகாரின் பேரில் போலீசார் வாலிபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story