திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்

திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.
அமராவதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏழுமலையான் கோவிலில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று குடும்பத்துடன் சாமி தரிசனம் சென்றார். அவர் நேற்று மாலை திருமலைக்கு வந்தார்.
அதன்பின்னர், இரவு விடுதியில் தங்கிய நிர்மலா சீதாராமன் இன்று அதிகாலை ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர், கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு நிர்மலா சீதாராமன் உணவு பரிமாறினார்.
Related Tags :
Next Story






