காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு


காஷ்மீரில் வெள்ளம், நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 April 2025 9:56 AM IST (Updated: 21 April 2025 10:12 AM IST)
t-max-icont-min-icon

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக கடந்த சனிக்கிழமை இரவு கனமழை பெய்தது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள ஜம்பா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. மேலும், சாலைகள் முற்றிலும் சேதமடைந்தன.

வெள்ளம், நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டன. ஆனாலும், இந்த சம்பவத்தில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

கனமழை, வெள்ளத்தால் ரைசி மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இரு மாவட்டங்களிலும்மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

1 More update

Next Story