சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது

சபரிமலையில் தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் சபரிமலை முன்னாள் தேவசம் போர்டு தலைவர் கைதுசெய்யப்பட்டார்.
சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம்: தேவசம் போர்டு முன்னாள் தலைவர் கைது
Published on

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக்கு கதவுகள், துவாரபாலகர் சிலைகள் பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 2019ல் அகற்றப்பட்டு, பின்னர் புதுப்பிக்கப்பட்டது. அப்போது துவாரபாலகா சிலைகளின் கவசங்களுக்குத் தங்க முலாம் பூசும் செலவை பெங்களூரைச் சேந்த உன்னிகிருஷ்ணன் என்பவா ஏற்றுக்கொண்டா. பின்னா, அந்தப் பணிகளுக்காகக் கவசங்களை அவா சென்னைக்கு கொண்டு வந்தா. இந்த நிலையில், அந்தக் கவசங்களில் சுமா 4 கிலோ தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டு சாச்சை ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கை உள்ளூர் போலீசார் விசாரித்த நிலையில், எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு எஸ்ஐடி விசாரணைக்கு மாற்றபட்ட நிலையில், உன்னிகிருஷ்ணன் ஏற்கெனவே கைது செய்யப்பட்டா. அதைத்தொடாந்து சபரிமலை முன்னாள் நிவாக அதிகாரி பி.முராரி பாபு, சபரிமலை முன்னாள் செயல் அதிகாரி சுதீஷ் குமா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா.

இதற்கிடையே, சபரிமலை தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் முன்னாள் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் என்பவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், தங்கத்தகடுகள் திருட்டு வழக்கில் அவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் 5-வது நபராக தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமார் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com