முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் காலமானார்
Published on

புனே,

முன்னாள் மத்திய உள்துறை மந்திரி சிவராஜ் பாட்டீல் (வயது 91) இன்று காலமானார். மராட்டியத்தின் லத்தூர் நகரில் உள்ள அவருடைய வீட்டில் இருந்தபோது, வயது முதிர்வு மற்றும் உடல்நல குறைவால் அவர் காலமானார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான அவர், மத்திய உள்துறை மந்திரியாக பதவி வகித்ததுடன், இந்திய அரசியலில் பிரபல நபராகவும் இருந்துள்ளார். நீண்டகாலம் பொதுமக்களுக்கு சேவையாற்றியதற்காக அவர் நினைவுகூரப்படுவார்.

அவருடைய மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com