பஸ் மீது ஜீப் மோதி கோர விபத்து - 4 பேர் பலி


பஸ் மீது ஜீப் மோதி கோர விபத்து - 4 பேர் பலி
x

படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் டிட்வானா குட்ஜ்மன் மாவட்டம் மொமச்சர் கிராமத்தில் இருந்து புஷ்கர் நோக்கி இன்று ஜீப் சென்றுகொண்டிருந்தது. அந்த ஜீப்பில் 8 பேர் பயணித்தனர்.

லடுன் - சுஜன்கர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிரே வந்த பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story