சாலையை கடக்க முயன்ற சிறுவன் டிராக்டர் மோதி பலி - அதிர்ச்சி சம்பவம்


சாலையை கடக்க முயன்ற சிறுவன் டிராக்டர் மோதி பலி - அதிர்ச்சி சம்பவம்
x

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றுள்ளனர்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தெலுவரிகுடம் கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 4 வயதில் மோக்சித் என்ற மகன் இருந்தார்.

இதனிடையே, தம்பதி தங்கள் மகனுடன் அருகே உள்ள சூர்யபேட் மாவட்டம் நிமிகலு டங்கு என்ற கிராமத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று சென்றுள்ளனர்.

இந்நிலையில், உறவினர்கள் அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள கோவிலில் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, சிறுவன் மோக்சித் திடீரென கோவில் அருகே உள்ள சாலையை கடக்க முயன்றுள்ளான்.

அப்போது சாலையில் வந்த டிராக்டர் சிறுவன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் சிறுவன் மோக்சித் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story