கோவா புதிய கவர்னராக கஜபதி ராஜு இன்று பதவியேற்பு


கோவா புதிய கவர்னராக கஜபதி ராஜு இன்று பதவியேற்பு
x
தினத்தந்தி 26 July 2025 10:14 AM IST (Updated: 26 July 2025 12:32 PM IST)
t-max-icont-min-icon

கஜபதி ராஜுவுக்கு கோவா ஐகோர்ட்டு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

பனாஜி,

கோவா மாநில கவர்னராக செயல்பட்டு வந்தவர் பிஎஸ் ஸ்ரீதரன் பிள்ளை. இவரது பதவிகாலம் நிறைவடைந்த நிலையில் புதிய கவர்னராக அசோக் கஜபதி ராஜு (74) செயல்படுவார் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், கோவாவின் புதிய கவர்னராக அறிவிக்கப்பட்டுள்ள கஜபதி ராஜு இன்று பதவியேற்க உள்ளார். கஜபதி ராஜுவுக்கு கோவா ஐகோர்ட்டு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கஜபதி ராஜு 2014 முத்ல 2018 வரை மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக செயல்பட்டுள்ளார். அதேபோல், ஆந்திர மந்திரி சபையில் மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story