வெளிநாட்டவர்களுக்காக மதுக்கொள்கையை தளர்த்திய குஜராத் அரசு


வெளிநாட்டவர்களுக்காக மதுக்கொள்கையை தளர்த்திய குஜராத் அரசு
x

டெக் சிட்டியில் மட்டும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் மது விற்பனையை மாநில அரசு அங்கீகரித்தது.

காந்திநகர்

குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் காந்திநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவை மையமாகவும், இந்தியாவின் முதல் க்ரீன்பீல்டு ஸ்மார்ட் சிட்டியாகவும் கருதப்படும் டெக் சிட்டியில் மட்டும் கடந்த 2023-ம் ஆண்டு முதல் மது விற்பனையை மாநில அரசு அங்கீகரித்தது.

அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் அமைந்துள்ள டெக் சிட்டியில் உள்ள ஓட்டல், ரெஸ்டாரண்டுகள் மற்றும் கிளப்புகளில் அங்கு பணிபுரியும் வெளிநாட்டவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அனுமதி சீட்டுடன் மதுபானம் அருந்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த நடைமுறையை மாநில உள்துறை அமைச்சகம் நீக்கியதுடன் தனது செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்து அவர்கள் மதுபானம் அருந்தலாம் என்ற புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.

மேலும் தற்போது புதிய அறிவிப்பாக கிப்ட் சிட்டியில் உள்ள புல்வெளிகள், நீச்சல் குளங்கள் மற்றும் மொட்டை மாடிகள் போன்ற பிற பகுதிகளிலும் வெளிநாட்டவர்கள் மதுபானம் அருந்தலாம் என்று விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கியுள்ளது.

1 More update

Next Story