வீட்டின்முன் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர்.
வீட்டின்முன் ஏற்பட்ட தகராறை தடுக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் அடித்துக்கொலை
Published on

சண்டிகர்,

அரியானா மாநிலம் கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் ரமேஷ் குமார் (வயது 57). இவர் தனிஷ்யாம் லால் நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், ரமேஷ் குமார் வீட்டின் அருகே இரு தரப்பினர் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறை தடுக்க ரமேஷ் குமார் சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒரு தரப்பினர் ரமேஷ் குமாரை செங்கல், உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவத்தில் ரமேஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com