மனைவியை வெட்டி கொன்று கணவன் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

கோப்புப்படம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொன்று விட்டு கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள ஏரூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெஜி (56 வயது). இவருடைய மனைவி பிரசோபா (48 வயது). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் பிரசோபாவின் வீட்டில் இருந்து அவரது அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் அவருடைய வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது பிரசோபா வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
மேலும் படுக்கை அறையில் ரெஜி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொன்று விட்டு ரெஜி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






