இந்தியா தாக்கப்பட்டால்... உலகிற்கு வலிமையான செய்தியை கொடுத்திருக்கிறோம்: அமித்ஷா பேச்சு

நாட்டில் வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர் என மத்திய மந்திரி அமித்ஷா இன்று பேசியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் ததியா கிராமத்திற்கு வருகை தந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு இன்று பேசினார்.
அவர் பேசும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், உலகில் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. வறுமையில் இருந்து 27 கோடி பேர் மீட்டெடுக்கப்பட்டு உள்ளனர். நாட்டை பாதுகாப்பாக இருக்க செய்ய வேண்டும் என்பதே பிரதமர் மோடி செய்த மிக பெரிய விசயம் ஆகும் என்றார்.
காங்கிரஸ் காலத்தில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன என கூறிய அவர், உரி தாக்குதலுக்கு பதிலடியாக, துல்லிய தாக்குதலை மோடி நடத்தினார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனால், இந்தியா தாக்கப்பட்டால், கடுமையான விளைவுகள் ஏற்படும் என உலகிற்கு ஒரு வலிமையான செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.