கத்தார் அதிபர் இந்தியா வருகை.. விமான நிலையத்திற்கு சென்று வரவேற்ற பிரதமர் மோடி


இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர், ஜனாதிபதி திரவுபதி முர்முவை நாளை சந்திக்கிறார்.

புதுடெல்லி:

கத்தார் நாட்டின் அதிபர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வந்தார். தனி விமானம் மூலம் இன்று மாலை டெல்லி வந்தடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேரில் சென்று அவரை வரவேற்றார். இவ்வாறு பிரதமரே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்பது அரிய நிகழ்வாகும்.

பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வந்துள்ள கத்தார் அதிபர், நாளை (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அப்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை, இஸ்ரேல்-ஹமாஸ் போர் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் என இந்தியா-கத்தார் இடையிலான உறவுகள் சமீபகாலமாக வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story