இந்தியா - பாகிஸ்தான் போட்டி: பாஜக நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது....சிவசேனா கண்டனம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது
புதுடெல்லி ,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (டி 20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் களத்தில் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் இரு நாட்டு உறவு மேலும் மோசமடைந்துள்ள சூழலில் நடைபெறும் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் பாஜகவுக்கு சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளர் . இது தொடர்பாக அவர் கூறியதாவது,
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்திய அணியை விளையாட அனுமதித்து இந்திய கிரிக்கெட் வாரியமும் (பிசிசிஐ) . பாஜகவும் நாட்டுக்கு துரோகம் செய்துள்ளது . போட்டி நடைபெறும் நாளான 14-ம் தேதி 'எனது சிந்தூர், எனது நாடு' என்ற பெயரில் போராட்டம் நடத்தப்படும் . என தெரிவித்துள்ளார்.






