சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேற்றம் - ஐ.நா. அறிக்கையில் தகவல்


சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா 9-வது இடத்துக்கு முன்னேற்றம் - ஐ.நா. அறிக்கையில் தகவல்
x

ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியா உலகின் முதல் 10 காடுகள் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

புதுடெல்லி,

ஐ.நா. உணவு, வேளாண்மை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதவது:-

உலகின் மொத்த வனப்பகுதி 414 கோடி ஹெக்டேர்களாக உள்ளது. இது உலகின் நிலப்பரப்பில் 32 சதவீதத்தை உள்ளடக்கியது. இதில் பாதிக்கும் மேற்பட்டவை 54 சதவீதம் ரஷியா, பிரேசில், கனடா, அமெரிக்கா, சீனா ஆகிய 5 நாடுகளில் மட்டுமே இருக்கின்றன. உலகின் 20 சதவீத காடுகள் இப்போது சட்டப்பூர்வமாக நிறுவப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன.

ஆஸ்திரேலியா, காங்கோ, இந்தோனேசியாவை தொடர்ந்து இந்தியா உலகின் முதல் 10 காடுகள் நிறைந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. வன மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா 10-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

காடுகள் மூலம் சீனா 16.9 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதியில் அதிகபட்ச வருடாந்திர அதிக வருமானத்தை பதிவு செய்தது. ரஷிய கூட்டமைப்பு 9.42 லட்சம் ஹெக்டேரிலும், இந்தியா 1.91 லட்சம் ஹெக்டேரிலும் வருமானத்தை ஈட்டியுள்ளன. வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில் உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்க வைத்து கொண்டது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் யாதவ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் ‘‘இந்தியாவின் பெரிய அளவிலான காடு வளர்ப்பு மற்றும் வன பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றியை இது பிரதிபலிக்கிறது’’ என கூறியுள்ளார்.

1 More update

Next Story