ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்வு

கடந்த 6 காலாண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியாகும்
டெல்லி,
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டுக்கான ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில், நடப்பு நிதியாண்டில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உற்பத்தி துறையில் உற்பத்தி அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி குறைப்பு, நுகர்வு அதிகரிப்பு உள்பட பல்வேறு காரணிகளால் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.2 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 6 காலாண்டுகளில் அதிகபட்ச வளர்ச்சியாகும்.
அரசின் பொருளாதார சீரமைப்பு மற்றும் வளர்ச்சி கொள்கைகளுக்கான விளைவே ஜூலை-செப்டம்பர் காலாண்டு ஜிடிபி வளர்ச்சியின் முடிவு என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






