இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. திருமண ஆசைகாட்டி தங்கும் விடுதியில் அடிக்கடி உல்லாசம்.. காதலன் மீது இளம்பெண் புகார்


இன்ஸ்டாகிராமில் பழக்கம்.. திருமண ஆசைகாட்டி தங்கும் விடுதியில் அடிக்கடி உல்லாசம்.. காதலன் மீது இளம்பெண் புகார்
x

திருமண ஆசைகாட்டி தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு தற்போது மதம் மாறும்படி வற்புறுத்துவதாக காதலன் மீது இளம்பெண் புகார் அளித்தார்.

பெங்களூரு,

ஆந்திரா மாநிலத்தில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கும், பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே வசிக்கும் முகமது இசாக் என்ற அப்துல் ரசல் (வயது 28) என்பவருக்கும் கடந்த ஆண்டு (2024) இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இளம்பெண்ணை திருமணம் செய்வதாக முகமது இசாக்கும் உறுதி அளித்திருந்தார். இதற்கிடையில், இளம்பெண் வேறு மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை திருமணம் செய்ய முகமது இசாக் மறுத்து விட்டதாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் முகமது இசாக் மீது இளம்பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கும், முகமது இசாக்குக்கும் கடந்த ஆண்டு (2024) பழக்கம் ஏற்பட்டது. என்னை காதலிப்பதாக கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந் தேதி பெங்களூருவுக்கு வரும்படி தெரிவித்தார். அதன்படி, பெங்களூரு வந்த என்னை தனிச்சந்திராவில் உள்ள தங்கும் விடுதிக்கு முகமது இசாக் அழைத்து சென்று திருமண ஆசைகாட்டி என்னை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்தார். அதன்பிறகு, அடிக்கடி என்னை ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு வரவழைத்து உல்லாசம் அனுபவித்தார்.

கடந்த மாதம் முகமது இசாக்குக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது பற்றி எனக்கு தெரிந்தது. இதுபற்றி கேட்டதற்கு என்னுடன் தகராறு செய்தார். மேலும் என்னை திருமணம் செய்யவும் அவர் மறுத்து விட்டார். அவர் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் கடந்த மாதம் (செப்டம்பர்) தற்கொலைக்கு முயன்றேன். பின்னர் முகமது இசாக் குடும்பத்தினர் என்னை அழைத்து சமாதான பேச்சு நடத்தினா்.

அப்போது முஸ்லிம் மதத்திற்கு மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று முகமது இசாக், அவரது குடும்பத்தினர் தெரிவித்து விட்டனர். நான் மதம் மாறுவதற்கு மறுத்ததால், தற்போது வேறொரு முஸ்லிம் பெண்ணுடன், முகமது இசாக்குக்கு திருமண நிச்சய தார்த்தம் நடந்துள்ளது. வேறுமதத்தை சேர்ந்த என்னை காதலித்து, கற்பழித்து விட்டு தற்போது மதம் மாறினால் தான் திருமணம் செய்வேன் என்று கூறுகிறார்.

இவ்வாறு அந்த இளம்பெண் புகாரில் கூறியுள்ளார்.

அந்த புகாரின் பேரில் முகமது இசாக், அவரது குடும்பத்தினர் மீது எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story