மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக்கடன்; பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு


மாணவர்களுக்கு வட்டி இல்லாத கல்விக்கடன்;  பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு
x

பீகாரில் மாணவர் கடன் அட்டை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டசபைக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் ‘‘மாணவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு வாரிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வியை தொடர உதவும் வகையில் வட்டி இல்லாத கடன்கள் வழங்கப்படும்.

₹2 லட்சம் வரையிலான கடனை திருப்பி செலுத்தும் காலம் 60 மாதங்களில் இருந்து 84 மாதங்களாகவும், ₹2 லட்சத்துக்கு மேல் உள்ள கடனை செலுத்தும் காலம் 84 மாதங்களில் இருந்து 120 மாதங்களாகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது’’ என கூறியுள்ளார்.பீகாரில் மாணவர் கடன் அட்டை திட்டம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. முன்னதாக ஆண் விண்ணப்பதாரர்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்திலும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு 1 சதவீத வட்டி விகிதத்திலும் ₹4 லட்சம் வரை கல்விக்கடன் வழங்கப்பட்டன.

1 More update

Next Story