சர்வதேச மகளிர் தினம்: பெண்கள் மட்டுமே இயக்கிய பயணிகள் ரெயில்

விமான நிறுவனங்கள், விளையாட்டு அல்லது ரெயில்வே என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்.
ராஞ்சி,
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஜார்க்கண்டில் ராஞ்சி-டோரி பயணிகள் ரெயிலை அனைத்து பெண் ஊழியர்களும் இயக்கினர். இந்த குழுவில் லோகோ-பைலட், உதவி லோகோ-பைலட், ரெயில் மேலாளர், மூன்று டிக்கெட் சரிபார்ப்பவர்கள் மற்றும் நான்கு ஆர்.பி.எப். பணியாளர்கள் இருந்தனர்.
தென்கிழக்கு ரெயில்வேயின் ராஞ்சி பிரிவு மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த முயற்சியை எடுத்துள்ளது.
இது குறித்து ரெயில் மேலாளர் அனுபமா லக்ரா கூறியதாவது:-
"இந்திய ரெயில்வேயின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். பெண்கள் எந்த வேலையும் செய்ய வல்லவர்கள், அவர்களுக்கு வாய்ப்புகள் மட்டுமே தேவை. விமான நிறுவனங்கள், விளையாட்டு அல்லது ரெயில்வே என ஒவ்வொரு துறையிலும் பெண்கள் உயர்ந்து வருகின்றனர்." என்று அவர் கூறினார்.
அந்த ரெயில் காலை 9 மணிக்கு ராஞ்சி நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் டோரியை அடைந்தது. மொத்தம் 14 நிறுத்தங்கள் மட்டுமே இருந்த இந்த ரெயிலினை அனைத்து பெண்களும் வெற்றிகரமாக இயக்கினர்.






