ஜார்க்கண்ட்: சாலையின் பள்ளத்தில் சிக்கிக்கொண்ட மத்திய மந்திரியின் கார்
பா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் ஒன்று பஹராகோரா பகுதியில் நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
பஹராகோரா,
ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பஹராகோரா பகுதியில் பா.ஜ.க.வின் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், மத்திய வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.
இதன்பின்னர் ராஞ்சிக்கு திரும்புவதற்காக காரில் ஹெலிபேடுக்கு திரும்பியுள்ளார். ஆனால், கனமழையால் சாலையில் நீர் தேங்கி காணப்பட்டது. இதில் சாலையில் ஏற்பட்ட பள்ளம் ஒன்றில் சவுகானின் கார் சிக்கி கொண்டது. காரின் ஓட்டுநரால் காரை வெளியே எடுக்க முடியவில்லை.
இதன்பின்னர் அவர், காரில் இருந்து கீழே இறங்கி, குடையுடன் சென்று உள்ளூர் மக்களிடம் சிறிது நேரம் பேசினார். இதன்பின்பு, பாதுகாப்பாக ஹெலிபேட் சென்று ஹெலிகாப்டரில் ராஞ்சி நகருக்கு திரும்பினார் என்று சப்-டிவிசனல் காவல் அதிகாரி அஜித் குமார் குஜுர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story