தெலுங்கானாவில் அரசியல் கட்சி தலைவர் மீது பாலியல் வழக்குப்பதிவு


தெலுங்கானாவில் அரசியல் கட்சி தலைவர் மீது பாலியல் வழக்குப்பதிவு
x

பணியில் இருந்தபோது, தன்னை கே.ஏ.பால் தவறான முறையில் தொட்டதாக 24 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரஜா சாந்தி கட்சியின் தலைவர் கே.ஏ.பால். இவர் மிது 24 வயது பெண் ஒருவர், ஐதராபாத் பஞ்சகுட்டா போலீஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை புகார் அளித்தார். அதில், கடந்த ஆகஸ்டு மாதம், கே.ஏ.பாலின் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளராக வேலைக்கு சேர்ந்து, இந்த மாதம் விலகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

தான் பணியில் இருந்தபோது, தன்னை கே.ஏ.பால் தவறான முறையில் தொட்டதாகவும், ஆசைக்கு இணங்குமாறு செல்போனில் செய்தி அனுப்பியதாகவும் அவர் கூறியுள்ளார். அதன்பேரில், கே.ஏ.பால் மீது பாரதீய நியாய சன்ஹிடா சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story