கமல்ஹாசன் டெல்லி பயணம்; இன்று எம்.பி.யாக பதவி ஏற்பு

மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன் என்று கமல்ஹாசன் கூறினார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக இன்று(வெள்ளிக்கிழமை) டெல்லியில் பதவியேற்க உள்ளார்.இதற்காக டெல்லி புறப்பட்டு சென்ற கமல்ஹாசன், முன்னதாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் வாழ்த்துகளுடன் டெல்லியில் உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன். இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதை மற்றும் கடமையை நான் செய்ய உள்ளேன். இதை நான், பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story






