பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு; ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு


பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு; ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு
x

மாதவிடாய் விடுப்பு கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது.

பெங்களூரு,

கர்நாடகாவில் பெண் பணியாளர்களின் நலனிற்காகவும் மற்றும் பணியிடத்தில் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதற்காகவும், மாதவிடாய் விடுப்பு கொள்கையை கர்நாடக அரசு உருவாக்கி உள்ளது.

அதன்படி, அரசு, தனியார் நிறுவனங்கள், ஆடை, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஒரு மாதத்தில் சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு வழங்க கர்நாடக மந்திரி சபை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் கட்டாய விடுப்பு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்த கர்நாடக அரசு இன்று பிறப்பித்துள்ளது. அதன்படி, 18 முதல் 52 வயதுடைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் மாதம் ஒருநாள் சம்பளத்துடன் கூடிய கட்டாயம் விடுப்பு வழங்கப்படவேண்டும். விடுப்பு எடுப்பதற்கு பெண்கள் எந்தவித மருத்துவ ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டியதில்லை. அதேவேளை, ஒரு மாதத்தில் மாதவிடாய் கால விடுப்பு எடுக்கவில்லையென்றால் அந்த விடுப்பை அடுத்த மாதம் சேர்த்து (2 நாட்களாக) எடுக்க முடியாது என கர்நாடக அரசு பிறப்பித்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story