கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்

மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடக்கம்
Published on

திருவனந்தபுரம்,

கேரளாவில் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி, முதற்கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம், பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 7 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. பஞ்சாயத்து அடிப்படையில் ஒரு வாக்காளர் கிராம, ஊராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து என 3 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு நிறைவடைய உள்ளது. காலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

கேரளாவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com