கேரளா: துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐ.என்.எஸ். சூரத்’ கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
சிங்கப்பூரை சேர்ந்த சரக்கு கப்பல் 'எம்.வி. வான் ஹய் 503', கடந்த 7-ந்தேதி இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கிளம்பியது. சுமார் 270 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் வரும் 10-ந்தேதி மும்பை துறைமுகத்தை சென்றடைய இருந்தது.
இந்நிலையில், இந்த கப்பல் கேரள மாநிலத்தின் கண்ணூர் துறைமுகம் அருகே வந்தபோது, கப்பலில் எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து காலை 10.30 மணியளவில் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 11 மணியளவில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். சூரத்' கப்பல் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 22 பேர் இருந்த நிலையில், 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story






