கர்னூல்: ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்...? அதிர்ச்சி தகவல் வெளியீடு


கர்னூல்:  ஆம்னி பஸ் தீ விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பலிக்கு இதுவா காரணம்...? அதிர்ச்சி தகவல் வெளியீடு
x
தினத்தந்தி 25 Oct 2025 2:07 PM IST (Updated: 25 Oct 2025 2:08 PM IST)
t-max-icont-min-icon

ஐதராபாத் நகரை சேர்ந்த மங்காநாத் என்ற தொழிலதிபரால் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

கர்னூல்,

ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் ஒன்று 44 பேருடன் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கர்னூல் நகரருகே எதிரே வந்த பைக் மீது மோதியது. இந்த விபத்தில், அந்த பைக் பஸ்சின் கீழே இழுத்து செல்லப்பட்டதில், அதன் எரிபொருள் டேங்க் மீது மோதியுள்ளது.

இதனால் அது வெடித்து உள்ளது. சம்பவம் நடந்தபோது, பயணிகள் தூங்கி கொண்டிருந்தனர். தீ விபத்தின்போது ஏற்பட்ட மின்கசிவால், பஸ்சின் கதவுகள் பூட்டி கொண்டு திறக்க முடியாமல் போனது என கூறப்படுகிறது.

விபத்தின்போது, ஜன்னல்களை உடைத்து 20 பயணிகள் உயிர் தப்பினர். எனினும், 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ் விபத்தில் பலர் பலியான சம்பவத்திற்காக காரணம் பற்றி அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்த பஸ்சில் 234 ஸ்மார்ட்போன்கள் இருந்துள்ளன என கூறப்படுகிறது. ரூ.46 லட்சம் மதிப்பிலான இந்த செல்போன்கள் மங்காநாத் என்ற ஐதராபாத் நகரை சேர்ந்த தொழிலதிபரால் பார்சலாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி தடயஅறிவியல் நிபுணர்கள் கூறும்போது, பஸ்சில் இருந்த பேட்டரிகள் வெடித்து, அது தீ பரவுதலில் பெரும் பங்காற்றியிருக்க கூடும் என தெரிகிறது என தெரிவித்தனர். அந்த செல்போன்கள் பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

இந்த வழக்கில் அலட்சியம் மற்றும் அதிவேகம் ஆகியவை ஓட்டுநருக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டாக கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update

Next Story