வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுமியை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை


வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுமியை இழுத்துச் சென்று கொன்ற சிறுத்தை
x

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மண்டோரா கிராமத்தில் நேற்று மாலை 7 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை கடித்து அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு இழுத்துச் சென்றது.

தொடர்ந்து கிராம மக்கள் சிறுத்தையிடம் இருந்து சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே, சிறுமியின் வீட்டில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் அவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஊருக்குள் புகுந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் மண்டோரா கிராம மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

1 More update

Next Story