என்னை பிரபலமாக்கிய தெருநாய்கள் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நகைச்சுவை


என்னை பிரபலமாக்கிய தெருநாய்கள் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நகைச்சுவை
x

சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும், வழக்கை ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி விக்ரம் நாத் கூறியுள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீதிபதி விக்ரம் நாத் பேசியதாவது:-

நீண்ட காலமாக எனது வேலைகளுக்காக சிறு வட்டாரத்திற்குள்ளாகவே நான் அறியப்பட்டிருக்கிறேன். ஆனால், தெரு நாய்கள் விவகாரம் தொடர்பாக, இந்த நாட்டில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள முழு சிவில் சமூகத்திலும் எனக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தெருநாய்கள் குறித்த வழக்கு, தன்னை உலகம் முழுவதும் பிரபலமாக்கிவிட்டது.சர்வதேச சமூக அங்கீகாரம் கிடைக்க உதவிய தெருநாய்களுக்கும், இந்த வழக்கை எனக்கு ஒதுக்கிய தலைமை நீதிபதிக்கும்(பி. ஆர். கவாய்) நான் நன்றியுள்ளவராக இருக்கிறேன் என்றார்.

2027 ஆம் ஆண்டில் தலைமை நீதிபதிக்கான வரிசையில் இடம்பெறும் விக்ரம் நாத்தான், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் ஆகஸ்ட் 11 ஆம் தேதியில் வெளியான உத்தரவை மாற்றியமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story