மத்திய பிரதேசம்: பள்ளி மாணவர்களுக்கு மது விருந்து அளித்த ஆசிரியர் சஸ்பெண்ட்

வீடியோ வைரலான நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் லால் நவீனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசம் மாநிலம் கத்னி அருகே கிர்கானி கிராமத்தை சேர்ந்தவர் லால் நவீன் பிரதாப் சிங். அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி வகுப்புக்கு பாடம் எடுக்க வரும்போதெல்லாம் மதுபோதையிலேயே தொடர்ந்து வந்துள்ளார்.
மேலும் தன்னுடைய மாணவர்களுக்கும் மது போதையின் ருசியை தொடர்ந்து காட்டியுள்ளார். பள்ளி விடுமுறை தினத்தன்று மாணவர்களை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு மதுபானத்தை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்தார்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வீடியோ வைரலான நிலையில் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகம் லால் நவீனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story






