டெல்லி மெட்ரோ அருகே பெரும் தீ விபத்து; 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சாம்பலாகின - ஒருவர் பலி


டெல்லி மெட்ரோ அருகே பெரும் தீ விபத்து; 500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் சாம்பலாகின - ஒருவர் பலி
x

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன என எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்டு உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியின் ரோகிணி பகுதியில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே குடிசை வீடுகள் நிறைய அமைந்துள்ளன. இந்த நிலையில், அதன் நுழைவு பகுதியில் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், பலரால் தப்பி வெளியே செல்ல முடியவில்லை.

இந்த தீ விபத்தில் பல குடும்பங்கள் சிக்கி கொண்டன. பலர் சுவர்களை உடைத்து கொண்டு தப்ப முயன்றனர். சம்பவம் பற்றி அறிந்து 8 முதல் 10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போலீசாரும் உதவி புரிந்தனர். இதில், 500 வரையிலான குடிசை வீடுகள் சாம்பலாகின.

தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளார். பழைய பொருட்களுக்கான டீலராக செயல்பட்ட அவர் முன்னா (வயது 30) என அடையாளம் காணப்பட்டு உள்ளார். ராஜேஷ் என்ற மற்றொரு நபர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடய அறிவியல் மற்றும் போலீசார் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், பாதிக்கப்பட்டோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவினரும் சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story