உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது


உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
x

உத்தர பிரதேச முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் அவசர உதவி எண் 112-க்கு வந்த அழைப்பில் பேசிய நபர், அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை வரும் ஜனவரி 26-ந்தேதி சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் உத்தர பிரதேசத்தின் இஸாத்நகர் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் அந்த நபர் பேசியுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வந்த இந்த அழைப்பு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த தொடங்கினர். மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த மொபைல் எண் யாருடையது என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட நபரின் இருப்பிடத்திற்கு போலீசார் நேரில் சென்றனர்.

இதன்படி நேற்று காலை அணில் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு பயன்படுத்தப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் காவல்துறையினரை மிரட்டும் வகையில் பேசி, கூச்சலிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் நோக்கம் மற்றும் மனநிலை குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story