கேரளா: மதவழிபாட்டு தலத்தில் பட்டாசு வெடித்து விபத்து - ஒருவர் பலி

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கடதி கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் இன்று திருவிழா கொண்டாட ஏற்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
இந்த கொண்டாட்டத்தின்போது பட்டாசு வெடிப்பதற்காக மத வழிபாட்டு தலத்திற்குள்ளேயே இன்று காலை 8 மணியளவில் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இந்த வெடி தயாரிப்பில் ரவி, ஜேம்ஸ் ஆகிய இருவர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், பட்டாசு தயாரித்தபோது திடீரென பட்டாசு வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரவி (வயது 68) உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஜேம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story






