ரூ. 50-க்காக நண்பனை கல்லால் அடித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்


ரூ. 50-க்காக நண்பனை கல்லால் அடித்துக்கொன்ற நபர் - அதிர்ச்சி சம்பவம்
x

50 ரூபாய்க்காக நண்பனை கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

மத்தியபிரதேசம் மாநிலம் விடிஷா மாவட்டம் கலா பதர் கிராமத்தை சேர்ந்தவர் ராம் ஸ்வார்ப் அகிர்வால். இவரது நண்பன் தினேஷ் அகிர்வால். இதனிடையே ராமிற்கும் தினேசுக்கும் இடையே கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

தினேசுக்கு 50 ரூபாய் பணத்தை ராம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டபோது தினேஷ் கொடுக்கவில்லை. இதனால், இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 50 ரூபாய் பணத்தை கொடுக்காததால் ஆத்திரமடைந்த ராம் நேற்று மாலை தினேஷை கிராமத்திற்கு அருகே ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்தும் ரூ. 50 பணத்திற்காக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் தினேசை அவரது நண்பரான ராம் கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தினேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தினேசை கொலை செய்த ராமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 More update

Next Story