கள்ளக்காதலனை தேடி வீட்டிற்கு வந்த திருமணமான பெண்.. வாலிபரின் குடும்பம் செய்த கொடூர செயல்


கள்ளக்காதலனை தேடி வீட்டிற்கு வந்த திருமணமான பெண்.. வாலிபரின் குடும்பம் செய்த கொடூர செயல்
x

அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர். அவருக்கும், வாலிபருக்கும் இடையே கள்ளஉறவு இருந்து வந்துள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ளது சஹாவ்பூர் கிராமம். நேற்று காலை இங்குள்ள ஒரு வீட்டில் 31 வயது பெண் வெட்டி கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தீப் என்பவரது வீட்டில் அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது. அந்த பெண்ணின் பெயர் மம்தா என்றும், அவர் கோரக்பூரை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மம்தா ஏற்கனவே திருமணமானவர். மம்தாவுக்கும் சந்தீப்புக்கும் இடையே கள்ளஉறவு இருந்து வந்துள்ளது. இதற்கிடையே சந்தீப்புக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இந்த நிலையில் மம்தா நேற்று முன்தினம் இரவு சந்தீப்பின் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரது பெற்றோரும், சகோதரிகளும் வீட்டில் இருந்துள்ளனர். சந்தீப்பின் மனைவி தனது தாய்வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று காலை 6 மணி அளவில் சந்தீப், இயற்கை உபாதை கழிக்க சென்ற நேரத்தில், அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகள் மம்தாவுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். இதில் அவரை வீட்டில் இருந்த கோடரியால் தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

சந்தீப் திரும்பி வந்தபோது மம்தா ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் கோடரி ரத்தக்கறையுடன் கிடந்துள்ளது. உடனே சந்தீப் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தனது பெற்றோர் இந்த கொலையை செய்ததாக அவர் குற்றம்சாட்டி உள்ளார். சம்பவம் நடந்ததில் இருந்து சந்தீப்பின் பெற்றோரும், அவரது 4 சகோதரிகளும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story