"வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
x

முருகப் பெருமானின் அருள் நமக்கு பலம், வளம் வழங்கட்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

தைப்பூச திருவிழா தமிழகம் முழுவதிலும் உள்ள முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து பகுதிகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில்களில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள். முருகப் பெருமானின் தெய்வீக அருள் நமக்கு பலம், வளம், ஞானம் ஆகியவற்றை வழங்கட்டும். இந்தப் புனிதமான நாளில் அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்காக பிரார்த்திக்கிறேன். இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், நேர்மறையையும் கொண்டுவரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story