ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்


ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
x

டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கம் தோண்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள விளக்கத்தில், ஆரவல்லி மலைத்தொடரில் எந்தவொரு புதிய சுரங்க குத்தகைகளையும் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தடை வித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story