மாடல் அழகி மர்ம மரணம் - காதலனிடம் விசாரணை


மாடல் அழகி மர்ம மரணம் - காதலனிடம் விசாரணை
x

மாடல் அழகியான குஷ்பு அஹ்வார் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார்.

போபால்,

மத்தியபிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த 21 வயது இளம்பெண் குஷ்பு அஹ்வார். இவரது காதலன் குவாசம். மாடல் அழகியான குஷ்பு அஹ்வார் சமூகவலைதளத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தார்.

இந்நிலையில், குஷ்பு அஹ்வாருக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை காதலன் குவாசம் போபாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதித்த உடன் குவாசம் அங்கிருந்து ஓடிவிட்டார்.

குஷ்பு அஹ்வாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.. தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், குஷ்புவின் காதலன் குவாசமை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மாடல் அழகி மர்ம மரணமடைந்த நிலையில் பிரேத பரிசோதனைக்குப்பின்னே குஷ்புவின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும். அதேவேளை, குஷ்புவின் காதலன் குவாசமிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story