பத்ரகாளி அம்மன் சிலைக்கு அன்னை மேரி போன்று அலங்காரம் செய்த பூசாரி கைது


பத்ரகாளி அம்மன் சிலைக்கு அன்னை மேரி போன்று அலங்காரம் செய்த பூசாரி கைது
x

அம்மன் தனது கனவில் தோன்றியதாகவும், தன்னை அன்னை மேரி வடிவத்தில் அலங்காரம் செய்யுமாறும் கூறியதாக பூசாரி கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை செம்பூர் வாஷிநாக்கா பகுதியில் பத்ரகாளி தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சம்பவத்தன்று பக்தர்கள் வழக்கம் போல் தரிசனம் செய்ய வந்தனர். அப்போது பத்ரகாளி சிலை அன்னை மேரி வடிவம் போன்று ஆடை அலங்காரம் செய்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். இது வைரலாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.சி.எப். போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் பூசாரி ரமேஷ் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதற்கு பதிலளித்த பூசாரி தனது கனவில் அம்மன் தோன்றியதாகவும், தன்னை அன்னை மேரி வடிவத்தில் அலங்காரம் செய்யுமாறு கூறியதால் பத்ரகாளி சிலைக்கு அவ்வாறு அலங்காரம் செய்ததாகவும் தெரிவித்தார். இந்த விளக்கம் பக்தர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டதாக பூசாரி ரமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story